நிறம் மாறும் சிவலிங்கம்
மூன்று வேளையும் நிறம் மாறும் 1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம்… இன்றுவரை துலங்காத மர்மம்!…
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது.
தோல்பூரில் உள்ள 1000 ஆண்டு பழமைவாய்ந்த இந்த சிவனின் பெயர் அக்ஷலேஷ்வர் மஹாதேவ் என்பதாகும். இந்த லிங்கமானது காலை, நண்பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளில் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கிறது.இந்த அதிசயமானது வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது.
காலை நேரங்களில் சிவந்த நிறத்தில் காட்சியளிக்கும் இந்த லிங்கம் , நண்பகலில் காவி நிறத்தில் காட்சியளிக்கிறது,இரவில் கருப்பாக காட்சியளிக்கிறது. மீண்டும் காலையில் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது.
Categories: Uncategorized